“டெல்லியிலிருந்துதான் எல்லா முடிவும்“, ஈரான் போர்-மோடி ஆலோசனை, அமெரிக்காவிற்கு நேட்டோ உதவி - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் March 20, 2026 02:14 PM
  • தமிழ்நாடு Vs டெல்லி என்பதை முன்வைத்தே இந்த தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போல், டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது என இபிஎஸ்-ன் டெல்லி பயணத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மடல்.
  • இன்னும் 4 நாட்களில் என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி.
  • சட்டமன்ற தேர்தலில் அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல். பாஜகவுக்கு 31, பாமக 17 தொகுதிகளும் ஒதுக்க அதிமுக திட்டம். அமமுகவுக்கு 9, தமாகாவுக்கு 4 தொகுதிகளிலும், இதர கூட்டணி கட்சிகளுக்கு மீதமுள்ள தொகுதிகள் பகிர்ந்து தரப்படும் என தகவல்.
  • சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 2ம் கட்ட நேர்காணலை இன்று நடத்துகிறார் தவெக தலைவர் விஜய். முதல் கட்டமாக 60 வேட்பாளர்களை நேர்காணல் செய்து தேர்வு செய்தார்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600-க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950-க்கு விற்பனை.
  • ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பதற்றத்தை தணிப்பதன் அவசியம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து, பிரான்ஸ், ஓமன், மலேசியா, ஜோர்டான் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை.
  • ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18 முதல் 45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு அதிர்ச்சித் தகவல்.
  • சீனாவிற்கான இந்திய தூதராக தமிழகத்தை சேர்ந்த விக்ரம் துரைசாமி நியமனம். விரைவில் புதிய பொறுப்பை ஏற்பார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்.
  • ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாகாப்பாக வருவதற்கு அமெரிக்காவிற்கு உதவத் தயார் என நேட்டோ மற்றும் ஜப்பான் அறிவிப்பு.
  • அமெரிக்காவின் அதிநவீன ஸ்டெல்த் வகை போர் விமானமான எஃப்-35-ஐ ஈரான் தாக்கிய சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • வாட்ஸ்அப்பில் செய்யப்படும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களின் தரத்தை மேம்படுத்த Noice Cancellation வசதியை விரைவில் அறிமுகப்படுத்த மெட்டா திட்டம்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.