இந்தியா பொதுமக்களுக்கு மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு (PAN Card) உள்ளது. 18 வயதுக்கு மேல் தனியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் பான் கார்டு கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், பான் கார்டு விண்ணப்பம் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு (Aadhaar Card) மட்டும் போதாது என்று கூறியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய பொதுமக்களுக்கான முக்கிய ஆதாரமாக உள்ள பான் கார்டுஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள வைத்திருக்கலாம். அதில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகள் மறைக்கப்படாமல் இருப்பதற்காக தான் அரசு பான் கார்டை கட்டாயமாக வைத்துள்ளது. பான் கார்டின் ஒருவரின் அனைத்து வங்கி கணக்குகளும் வந்துவிடும். எனவே அந்த நபர் எத்தனை கணக்குகளில் இருந்து எவ்வளவு பண பரிவர்த்தனை மேற்கொண்டாலும் அது பான் கார்டில் தெரிய வந்துவிடும். மோசடி மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுப்பதற்காக இந்த முறை பயன்பாட்டில் உள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு.. பெரும் பலன் அடைய போகும் தமிழகம்!
பான் கார்டுக்கு இனி ஆதார் மட்டும் போதாதுபான் கார்டு இத்தகைய மிக முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில், பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானதாக இருந்தது. ஆனால், தற்போது அதனை மத்திய அரசு மாற்றியுள்ளது. இது குறித்து மத்திய அரசின் பொது சேவை அமைப்பு கூறியுள்ளதாவது, பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளின்படி, ஆதார் அட்டையுடன் பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விமானப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி ஈசியா சீட் செலக்ட் பண்ணலாம்..!
மார்ச் 31-க்குள் ஆதார் மட்டுமே போதுமானதுபான் கார்டு விண்ணப்பம் தொடர்பான மேலும் ஒரு முக்கிய தகவலையும் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, மார்ச் 31, 2026-க்குள் பான் கார்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆதார் கார்டு மட்டுமே போதுமானது என கூறப்பட்டுள்ளது. அதற்கு பிறகு பான் கார்டு விண்ணப்பிக்கும் அனைவரும் ஆதாரமாக பான் கார்டு உடன் பிறந்த தேதியை உறுதி செய்யும் வகையிலான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.