தேனி மாவட்டத்தின் முதல் திமுக கூட்டத்தில் பங்கேற்றதில் சந்தோஷமாக இருக்கிறேன், இந்த கூட்டம் தளபதி மீண்டும் முதல்வர் ஆவதற்கான அறிகுறி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

திமுகவில் இணைந்த பின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தின் கடமலைக்குண்டில் நடந்த முதல் திமுக கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தேனி மாவட்டத்தின் முதல் திமுக கூட்டத்தில் பங்கேற்றதில் சந்தோஷமாக இருக்கிறேன், உணர்வு பூர்வமாக இருக்கிறேன். மக்களும் உணர்வு பூர்வமாக ஆதரவு முதல்வர் தளபதி அரசு மீண்டும் வருதற்கான அறிகுறி. தளபதி தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருக்கிறார்கள். நாளைய தேர்தல் வந்தாலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும்... அவர்களுக்கு ஏன் இந்த நிலைமை?” என்றார்.