2026-க்கான 19-வது ஐபிஎல் தொடர் வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎல் அணிகளின் வீரர்கள் சிலர் காயம் காரணமாக விலகியிருப்பது, அணிகளுக்கு உள்ளும், ரசிகர்களுக்கு உள்ளும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியில் பங்குபற்றியுள்ள 10 அணிகளில் இருந்து குறிப்பாக, சி.எஸ்.கே, ஆர்.சி.பி, போன்ற அணியில் இருந்து ஏனைய அணிகளில் இருந்தும் மொத்தமாக 09 முக்கியமான வீரர்கள் விலகியுள்ளனர். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நாதன் எல்லிஸ் விலகியுள்ளார். அவருக்கு தொடையில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளாரான ஹர்சித் ராணாவும், இலங்கை வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவும் விளக்கியுள்ளார்.
இதில் ஹர்சித் ராணா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியின் பயிற்சிப் போட்டியின் போதே காயம் அடைந்ததார். இதனால், அவர் இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அடுத்து பதிரன சி.எஸ்.கே அணியில் முக்கிய வீரராக இருந்தவர். கடந்த ஆண்டு மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது அவரை 18 கோடி கொடுத்து கே.கே.ஆர். அணி வாங்கியது. ஐவரும் கடந்த உலக கோப்பை டி20 போட்டியில் இருந்து தசை பிடிப்பு காரணமாக வெளியேறினார். இதனால் இந்த தொடரின் ஏதேனும் ஒருகட்டத்தில் ஆணுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து முக்கிய வீரர் விலகியுள்ளார். கடந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வென்ற பயணத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்த ஆஸ்திரேலிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட். இவர், கடந்த நான்கு மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். எனினும், இவர் தொடக்கப் போட்டிகளைத் தவிர்த்து, பிந்தைய போட்டிகளில் அணியுடன் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சி.எஸ்.கே அணியில் இருந்து ட்ரேட் செய்யப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது. அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியால் 03 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட புதிய வீரரான ஜாக் எட்வர்ட்ஸ், கால் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். மேலும் இதே அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் போது காயம் காரணமாக விலகிய அவர், தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால், அவர் ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவர் இல்லாத நிலையில், இஷான் கிஷன் அணியை வழிநடத்த உள்ளார்.
இவர்களுடன், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக, தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், சர்வதேசப் போட்டிகள் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.