தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, வேகா மாக குறைந்து வருகிறது. அதாவது, கோடை வெயில் தீவிரமடைவதற்கு முன்னரே மிக இவ்வாறு நீர்வரத்து வேகமாக குறைந்து வருவதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
மொத்த நீர் இருப்பு 224 டி.எம்.சியாக உள்ள நிலையில், தற்போது 100 டி.எம்.சி மட்டுமே நீர் உள்ளதாகவும், மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 76,297 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில், தற்போது வெறும் 45,545 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளதாக நீர்வளத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும். அப்போது குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடைமழை பெய்தால் நிலைமை சீராகும் என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், தற்போது மாநிலத்தின் பல்வேறு அணைகளில் நீர் இருப்பு குறைந்தாலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் 06 முக்கிய ஏரிகளில் 76 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இது, அடுத்த சில மாதங்களுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், காவிரி படுகை மாவட்டங்களில் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.