ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களைக் கவலையடையச் செய்யும் விதமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. பயிற்சியை முடித்துவிட்டுத் தனது கிட் பேக்கைச் சுமந்து கொண்டு டிரெஸ்ஸிங் ரூம் நோக்கிச் செல்லும் தோனி, காலில் ஒருவிதத் தளர்ச்சியுடன் நொண்டிக் கொண்டே (Limp) செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 44 வயதிலும் கிரிக்கெட்டிற்காகத் தன்னைத் தயார்படுத்தி வரும் தோனியின் இந்த உடல்நிலை மாற்றத்தைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பழைய முழங்கால் காயம் மீண்டும் தோனியைப் படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் பலரது கருத்துக்களில் பிரதிபலிக்கிறது. “தோனியின் கால் நிலைமை சரியாகத் தெரியவில்லை” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணியின் வெற்றிக்குத் தோனியின் இருப்பு மிக முக்கியம் என்பதால், தொடர் தொடங்குவதற்குள் அவர் முழு உடல் தகுதியைப் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.