200 ஸ்ட்ரைக் ரேட்…. கெயிலுக்கே சவால் விடும் வைபவ்…. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்….!!
SeithiSolai Tamil March 21, 2026 11:48 AM

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்த சுவாரஸ்யமான தகவல்களைச் சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். கடந்த 2025 சீசனில் அறிமுகமான வைபவ், தனது 14 வயதிலேயே 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவரிடம் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ‘உன்னுடைய கேம் பிளான் என்ன?’ என்று கேட்டதற்கு, “பந்து என் ஜோனுக்கு வந்தால் அதை காற்றில் பறக்க விட்டுவிடுவேன்” என்று எந்தவிதத் தயக்கமும் இன்றி அவர் சொன்ன பதில் இப்போது வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் படைத்த 175 ரன்கள் சாதனையை முறியடிப்பதே தனது இலக்கு என்று வைபவ் சூர்யவன்ஷி தைரியமாகச் சபதம் எடுத்துள்ளார். 2025-ல் சஞ்சு சாம்சன் தலைமையில் களம் கண்ட வைபவ், இந்த 2026 சீசனில் ரியான் பராக் தலைமையில் விளையாட உள்ளார்.

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறிவிட்ட சூழலில், வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணிக்குள் நுழைவதற்கு ஒரு மிகப்பெரிய படிக்கட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே இந்தச் சிறுவனின் பேட்டிங் ஸ்டைலை ஒரு ‘வீடியோ கேம்’ ஆட்டம் போல இருப்பதாகச் சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.