டெல்லி போதும்!.. தமிழ்நாட்டுக்கு அரசியலுக்கு வர துடிக்கும் கனிமொழி!.. நினைப்பது நடக்குமா?!..
Webdunia Tamil March 21, 2026 04:48 PM


மறைந்த முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி. எப்போது அரசியலுக்கு வந்தாரோ அப்போது முதலே அவரை டெல்லியில் பயன்படுத்த தொடங்கினார் கலைஞர் கருணாநிதி. அதாவது கனிமொழிக்கு எம்.பி. பதவியை கொடுத்து டெல்லிக்கு அனுப்பி திமுக தொடர்பான பணிகளை செய்து வந்தார் கலைஞர். கனிமொழியும் அப்பாவின் உத்தரவை ஏற்று டெல்லி பாராளுமன்றத்தில் திமுகவின் குரலாக முழங்கி வந்தார். கலைஞரின் மறைவுக்கு பின்னரும் அதை தொடர்ந்து செய்து வருகிறார் கனிமொழி.

ஆனால் தற்போது கனிமொழிக்கு தமிழ்நாடு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்கிறதாம்.. ஏனெனில் டெல்லியில் தனக்கு பெரிய மதிப்பு இல்லை, டெல்லியில் திமுக தொடர்பான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீஷனும் டி.ஆர்.பாலுவுமே செய்துவிடுவதால் தனக்கு பெரிய வேலையும், முக்கியத்துவமும் இல்லை என்று நினைக்கிறாராம் கனிமொழி.

எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளாராம். ஆனால் கனிமொழி தமிழக அரசிலுக்கு வருவது உதயநிதி ஸ்டாலின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது. எனவே அதுபற்றி எந்த ஒரு முடிவும் எடுக்காமல் அவர் அமைதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட அண்ணன் ஸ்டாலினை சந்தித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கனிமொழி பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு எந்தவிதமான பாசிட்டிவான பதிலையும் ஸ்டாலின் சொல்லவில்லை என செய்திகள் கசிந்திருக்கிறது..

ஒருபக்கம் எப்படியாவது அண்ணனிடம் பேசி வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என கனிமொழி விரும்புகிறார். ஏற்கனவே எம்.பியாக வெற்றி பெற்ற தூத்துக்குடி தொகுதியிலேயே போட்டியிடலாம் என்பது அவரின் திட்டம் என்கிறார்கள்.

கனிமொழி ஆசைப்படுவது நடக்குமா? திமுக தலைமை அதை அனுமதிக்குமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.