எரிபொருள் தட்டுப்பாடு!.. வாட்டர் கேன் விலை உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி!..
WEBDUNIA TAMIL March 21, 2026 05:48 PM


ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் கிடைக்காததால் இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கச்சா எண்ணெய் கிடைக்காததால் இந்தியாவில் பல மாநிலங்களில் வணிக சிலிண்டர் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது. அப்படியே ஓட்டல்கள் திறக்கப்பட்டிருந்தாலும் உணவு வகைகளின் விலை உயர்ந்திருக்கிறது..

இந்நிலையில்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்னீர் கேனின் விலை தற்போது உயர்ந்திருக்கிறது. 20 லிட்டர் மினரல் குடிநீர் கேன் 5 ரூபாயும், ஒரு லிட்டர் மினரல் குடிநீரின் பாட்டிலின் விலையில் 3 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.

மூலப் பொருட்களின் விலை, வேலை ஆட்களின் சம்பளம், மின்சார கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் எல்லா மாநிலங்களிலும் பொதுமக்கள் சமையலுக்கும், குடிப்பதற்கும் வாட்டர் கேன் நீரை பயன்படுத்துகிறார்கள். எனவே இந்த விலை உயர்வு அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.