சஞ்சீவ் – ஆல்யா மானஸா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஐலாவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் பரிசு!
CineReporters Tamil March 22, 2026 02:48 AM

சின்னத்திரையின் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகளில் ஒன்று சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா ஜோடி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி’ (சீசன் 1) சீரியலில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். அந்த சீரியலில் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. சீரியலில் காதலிக்க தொடங்கிய இவர்கள் நிஜத்திலும் காதலிக்க தொடங்கினர். 2019ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

சஞ்சீவ் – ஆல்யா மானஸா தம்பதிக்கு ஐலா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தங்கள் நடனம் மற்றும் குழந்தைகளின் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டு வருவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் தங்களது மூத்த மகளான ஐலாவின் பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.

தங்கள் மகள் ஐலா பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். இந்த பிறந்தநாள் விழாவில், ஐலாவிற்கு சர்ப்ரைஸாக ஒரு அழகிய சைக்கிளை பரிசாக அளித்தனர். சைக்கிளைப் பார்த்ததும் மகிழ்ச்சியான ஐலாவின் கியூட்டான ரியாக்ஷன் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் ஐலாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DWJFH7KD2CC

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.