இவ்ளோதான் சீட்!. இருந்தா இரு.. இல்லனா போ!.. திமுக அட்ராசிட்டி!.. ஆதவ் அர்ஜுனா தாக்கு!..
Webdunia Tamil March 22, 2026 03:48 PM


2021 சட்டமன்ற தேர்தலில் 13 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம், ஓபிஎஸ் என புதிதாக பல கட்சிகள் அந்த கூட்டணியில் இணைந்திருப்பதால் தொகுதி பங்கீடு பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை திமுகவால் கொடுக்க முடியவில்லை..

6 தொகுதிகள் கேட்ட மதிமுகவுக்கு நான்கு தொகுதிகளை மட்டுமே திமுக கொடுத்திருக்கிறது. அதேபோல் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இதில் பிரேமலதா அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் திமுக கூட்டணியில் பல வருடங்களாக இருந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் எங்களுக்கு 8 தொகுதிகளை கொடுங்கள் என திருமாவளவன் கேட்கிறாராம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என திமுக சொல்லிவிட்டது.

இதையடுத்துதான் நேற்று திருமாவளவன் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதில் இப்போதும் நமது அங்கீகாரத்துக்காக நாம் போராட வேண்டியிருக்கிறது என்றெல்லாம் புலம்பியிருந்தார். இந்நிலையில், தவெக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘நண்பனாக, சகோதரனாக எல்லாவற்றிலும் திமுகவுடன் அண்ணன் திருமாவளவன் நின்றார்..

பட்டியலின மக்கள் எத்தனை கோடி பேர் இருக்கிறார்கள்.. அவர்களின் முகமாக வளர்ந்து வந்தது அண்ணன் திருமாவளவன்தான். அவருக்கு 6 சீட் கொடுத்து இருந்தா இரு இல்லை என்றால் போ என்கிறார்கள்.. இதுதான் திமுகவின் அட்ராசிட்டி.. இதுதான் பண்ணையார்த்தனம்.. திமுக பண்ணையார்தனத்திலிருந்து இன்னமும் மாறவே இல்லை’ என பேசியிருக்கிறார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.