விருப்பமனு கால அவகாசம் நீட்டிப்பு- சசிகலா அறிவிப்பு
Top Tamil News March 22, 2026 08:48 PM

அஇபுதமமுக நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக சசிகலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இன்று முதல் 22 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் இன்றுடன் நிறைவடைந்தது. சசிகலாவின் ஆதரவாளர்கள் நிறைய பேர் விருப்பமனு வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை சொற்ப எண்ணிக்கையிலானவர்களே் விருப்ப மனு வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் அஇபுதமமுக நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக சசிகலா அறிவித்துள்ளார். நாளை மாலை 7 மணி வரை விருப்பமனுக்களை வழங்கலாம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.