2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை6யை நடத்தி வருகிறது. கடந்த முறை 13 கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்த திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 26 அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
எனவே இந்த முறை திமுக தொகுதி பங்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கினார்களோ அதே தொகுதிகளை கூட தற்போது ஒதுக்க முடியவில்லை.. ஆனால் அந்த கூட்டணி கட்சிகள் அதைவிட அதிகமான தொகுதிகளை எதிர்பார்க்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் 28 தொகுதிகள் வாங்கிக் கொண்டது. மேலும் தேமுதிக 10 தொகுதியில் வரை கேட்கிறது. மதிமுக, விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு கூட கேட்ட தொகுதிகளை திமுகவால் ஒதுக்க முடியவில்லை..
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரண்டு தொகுதிகளை கேட்கிறது. ஆனால் திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும் என சொல்ல திமுக கூட்டணியிலிருந்து வெளியறப்போவதாக வேல்முருகன் அறிவித்திருக்கிறார். மேலும் ‘கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த அமைச்சர்கள் எந்தெந்த துறை செயலாளர்கள் என்னென்ன தவறு செய்திருக்கிறார்கள் என்கிற எல்லா புள்ளி விவரமும் என் கையில் இருக்கிறது.. எல்லாவற்றையும் வெளியிடுவேன்.. இனிமேல்தான் திமுகவுக்கு இருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து ஊழல் செய்தது தெரியும் என்றால் ஏன் அந்த கட்சியில் கூட்டணி சேர வேல்முருகன் முயற்சி செய்தார். இதே அந்த கட்சிக்கு இரண்டு 2 தொகுதிகளை கொடுத்திருந்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.