வெட்கக்கேடு! ஸ்டாலின் அய்யோ பரிதாபங்கள்... தேவையில்லாத ஆணி தேமுதிக... அதிமுக, நாதக விமர்சனம்!
Seithipunal Tamil March 23, 2026 12:48 AM

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடக்கு தொகுதி பங்கீடு குறித்த செய்திகள், அக்கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்படுத்தியிருப்பதாக வெளிப்படுத்திக்கிறது.

குறிப்பாக குறைந்த சீட்டுகள் கிடைக்கும் என்று விசிக திருமாவளவன் காணொளி வெளியிட்டு குமுறி இருப்பதும், அக்கூட்டணியிலிருந்து தவாக வெளியேறுவதாக அறிவித்துள்ளதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியிடுபட்டுள்ள விமர்சனத்தில், "திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக.
வெளிப்படையாக குமுறிய விசிக.
கலகத்திற்கு ரெடியாகும் கம்யூனிஸ்ட்.
ஏற்கனவே திகட்டலில் காங்கிரஸ்.
இவற்றுக்கெல்லாம் காரணமாக தேவையில்லாத ஆணி தேமுதிக.
கலக்கத்தில் திமுக.
இதுதான் உண்மையான நிதர்சனம்.
இவை அனைத்தையும் மூடி மறைத்து அதனை patch work பார்த்துக் கொண்டிருக்கும் முக ஸ்டாலின் அய்யோ பரிதாபங்கள்" என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அவமானப்படுத்தப்படுகிறார் திருமா. எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் எனும் மனநிலையில் வேல்முருகன்.

ஓரிரு இடங்கள் கூடுதலாகப் பெறுவதற்கு  இழுத்தடிப்பு செய்யப்படுகிறார்கள் CPI(M) . தமிழ்நாட்டு காட்சி ஊடகங்கள் அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களை மட்டும்தான் பேசுவோம் என சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு நிற்கின்றன. வெட்கக்கேடு" என்று தெரிவித்துள்ளார்.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.