ஆனைமலையில் அதிர்ச்சி...! தனியார் தோட்டத்து மின்வேலியில் சிக்கி 45 வயது பெண் யானை பலி...!
Seithipunal Tamil March 22, 2026 08:48 PM

கோவை ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சரளப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது.

இந்த தகவலறிந்து வந்த வனத்துறையினர் நடத்திய ஆய்வில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த யானை சூரிய மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

யானையின் உடலில் காயம் இருந்ததும் கண்டறியப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் உத்தரவின் பேரில், வனக் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் யானைக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது.

அப்போது யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை மற்றும் கோவை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடற்கூராய்வுக்குப் பிறகு யானையின் உடல் வனப்பகுதியிலேயே விடப்பட்டது. யானையிடமிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஜோடி உலிக்கொம்புகள் வனச்சரக அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.