சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் தமிழக தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், எழும்பூர் 8-வது நடைமேடையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (36) என்பவரிடம் இருந்து ரூ.77,430 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணம் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல், ஹவுராவில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் எழும்பூர் நிலையத்தில் சோதனை செய்தபோது, துப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து ஒரு கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் ரூ.50,000 ஆகும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அண்ணா நகர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய நபர் குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.