நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரது விவாகரத்து வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் விஜய் தற்போது சங்கீதா விவகாரத்திலும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த சூழலில், சங்கீதா குறித்து விஜய்யின் தாயார் ஷோபா பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. இரு தரப்பினரும் பிரிந்து வாழும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இருவருக்கும் இடையே சமாதானம் என்கிற பேச்சுக்கு இடமில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் விஜய்க்கும் அவரது மகன் சஞ்சய்க்கும் இடையேயும் பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய்யின் தாயார் ஷோபா சங்கீதா குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்போது வைரலாகியுள்ளன.
அந்த நிகழ்ச்சியில் ஷோபா பேசியதாவது: ''நானாக எதுவும் எனது விருப்பப்படி சமைக்க மாட்டேன். சங்கீதாவிடம் என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சமைத்துக் கொடுப்பேன். அது பற்றி நான் சங்கீதாவுக்கு போன் செய்து கேட்டால் அவர் "நான் பசங்களிடம் கேட்டு சொல்கிறேன்" என்பார். பின்னர் சஞ்சயிடமும் சாஷாவிடமும் "அத்தை வீட்டுக்கு போகப் போகிறோம், என்ன வேண்டும்?" என கேட்பார்.
அதற்கு சஞ்சய்யும் சாஷாவும் தங்களுக்கு பிரியாணி வேண்டும் என்பார்கள். நானும் அவர்களுக்காக பிரியாணி செய்து வைப்பேன். அவர்கள் வீட்டுக்கு வந்து திருப்தியாக சாப்பிடுவார்கள். இருவரும் நன்றாக எஞ்சாய் பண்ணி சாப்பிடுவார்கள். அதுவும் சஞ்சய் தான் "பிரியாணி நன்றாக இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவார். எல்லா விஷயத்திலும் சங்கீதா அப்படித்தான் என்று கூறியுள்ளார். தற்போது இவ்வளவு அன்புடன் இருந்த இவர்களின் குடுப்பத்தில் யார் கண்ணு பட்டதோ என விஜய் ராசிகள் புலம்பி வருகின்றனர். அதே நேரம் கட்டிய மனைவியை ஒழுங்காக பார்த்துக்கொள்ளாத ஒருத்தர் எப்படி தமிழ்நாடு அரசியலில் பெண்களுக்கு பாதுகாவலராக இருக்க முடியும் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.