”TVK-வுக்கு டஃப் கொடுக்க ரெடி” விஜய் கட்சிக்கு எதிராக களமிறங்கும் பவர் ஸ்டார்…. 'அண்ணா வளர்ச்சி கழகம்' உதயமாகிறது….!!
SeithiSolai Tamil March 23, 2026 09:48 AM

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனது புதிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) எதிராகத் தான் களம் காணப் போவதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்காக ‘அண்ணா வளர்ச்சி கழகம்’ (AVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். இனி தேர்தல் களம் என்பது ‘TVK Vs AVK’ என்றே இருக்கும் என அவர் சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் திமுக-வுக்கு (DMK) ஆதரவளிக்கப் போவதாகவும் சீனிவாசன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், அவருக்கு எதிராகத் தீவிரமாகக் களப்பணியாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டாரின் இந்த திடீர் அரசியல் அறிவிப்பும், கட்சிப் பெயரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.