வட சென்னை: பாலக் சிக்கன் பாஸ்தா டு சௌசௌ சட்னி! - சமையல் சூப்பர் ஸ்டாரில் கலக்கிய போட்டியாளர்கள்!
Vikatan March 23, 2026 04:48 PM

வட சென்னையில் நடைபெற்ற சக்தி மசாலா சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3 போட்டி நிறைவு பெற்றது. சக்தி மசாலா, சௌபாக்யா ஆப்ளையன்சஸ், ஆர் கே ஜி நெய், கோல்ட் வின்னர், கோஹினூர் பாசுமதி அரிசி, நாகா, எக்சோ, சுப்ரீம் ஃபர்னிச்சர், இண்டேன், மெரிபா பனீர், சக்ரா கிரிடிகல் கேர் அண்ட் ஹாஸ்பிடல் ஆகியவை இணைந்து நிகழ்ச்சியை நடத்தின.

வட சென்னையில் நடைபெற்ற சமையல் சூப்பர் ஸ்டார்

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். முதல் சுற்றில், போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய உணவுகளை சுவை பார்த்து, அதன் பதம், சுவை, ஆரோக்கிய பயன்கள் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பத்து உணவுகளைத் தேர்வு செய்தார் நடுவர் செஃப் தீனா.

அதன் அடிப்படையில், நிஷா, மகாலட்சுமி பாலாஜி, பானுமதி, மகாலட்சுமி ஶ்ரீதர், தேவிகா, ஆயிஷா ராயிஸ், தனலட்சுமி, குணசுந்தரி, மோகனப்பிரியா ஆகிய பத்து பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் சுற்றான நேரடி சமையல் சுற்றில், ஒரு மணி நேரத்துக்குள் ஒரு ஸ்டார்ட்டர் அல்லது கிரேவி, ஒரு மெயின் டிஷ், ஒரு டெசர்ட் சமைக்க வேண்டும்.

பரபரப்பாக நடைபெற்ற நேரடி சமையல் சுற்றில், போட்டியாளர்களின் சமைத்த உணவுகளின் சுவை, காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் செஃப் தீனா வெற்றியாளர்களைத் தேர்வு செய்தார். அந்த வகையில், பாலக் சிக்கன் பாஸ்தா, பனீர் கோக்கனட் ரவா லட்டு, ஹவர் சமோசா ஆகியவை சமைத்த மகாலட்சுமி ஶ்ரீதர் ,கோதுமை ரவா உப்புமா, சௌசௌ சட்னி , கேசரி சமைத்த மகாலட்சுமி பாலாஜி மற்றும், கறி கஞ்சி, பூண்டு களி, ரோஜாப்பூ கிரேவி செய்த குணசுந்தரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றியாளர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேரடி சமையல் சுற்றில் பங்கேற்ற மீதமுள்ள ஏழு பேருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மூன்று பேரும் சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெறும் மாபெரும் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள்.!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.