தனுஷின் கர அப்டேட்: ஆளே அடையாளம் தெரியாத தோற்றத்தில் கே.எஸ்.ரவிகுமார்
CineReporters Tamil March 25, 2026 03:48 AM

தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். உதாரணமாக புதுப்பேட்டை, 3, அசுரன் என பல படங்களை சொல்லலாம். இந்த வரிசையில் தனுஷின் நடிப்பில் அடுத்து வெளீவர உள்ள படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் போர்தொழில் வெற்றிபட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இப்படத்தின் டைட்டில் டீஸர் வந்தபோதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் கர படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமாரின் தோற்றம் மற்றும் கதாபாத்திரம் குறித்த அறிவிப்புதான் இன்று வெளியாகியுள்ளது.

கர படத்தில் கே.எஸ்.ரவிகுமார் ‘கந்தசாமி’ என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒரு வயதான கிராமத்து பெரியவர் தோற்றத்தில் இருக்கிறார். இதற்கு முன்பும் பல படங்களில் அவர் பல்வேறு வேடங்களில் நடித்திருந்தாலும், ‘கர’ படத்தில் அவருடைய இந்த புதிய கெட்டப் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கே.எஸ்.ரவிகுமாரின் இந்த முதிர்ச்சியான தோற்றத்தைப் பார்க்கும்போது, நிச்சயம் இது ஒரு மிக அழுத்தமான மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ட்யூட் புகழ் மமிதா பைஜு நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், எம்.எஸ்.பாஸ்கர், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வருகிர ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.