ஈரானின் புதிய பாதுகாப்பு கவுன்சில் தலைவராக முகமது பாஹெர் ஸொல்கதர் நியமனம்..!
Seithipunal Tamil March 25, 2026 04:48 AM

ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இன்று (மார்ச் 24) முகமது பாஹெர் ஸொல்கதர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இருந்த அலி லாரிஜானி, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை அடுத்து முகமது அந்நாட்டு அதிபர் அலுவலகம், ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவரா பாஹெர் ஸொல்கதர் நியமித்து உத்தரவிட்டுள்ளது. 

அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ஈரான் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. இதில் ஈரானின் 35 ஆண்டு காலமாக உச்ச தலைவராக இருந்த காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஈரானும் இஸ்ரேல்+அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் 25 நாட்களை நெருங்கியுள்ள நிலையில், தற்போது தற்காலிக 05 நாள் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.