150 கோடி பட்ஜெட்!.. தனுஷ் படத்துக்கு ரூட்டை மாற்றிய மாரி செல்வராஜ்!..
CineReporters Tamil March 25, 2026 03:48 AM

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷை வைத்து
கர்ணன், உதயநிதியை வைத்து மாமன்னன், புதுமுக நடிகர்களை வைத்து வாழை, விக்ரமின் மகன் துருவை பைசன் ஆகிய திரைப்படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த எல்லா படங்களிலுமே தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கதை, திரைக்கதையாக அமைத்திருந்தார் மாரி செல்வராஜ்.

எனவே மாரி செல்வராஜ் சாதிய படங்களை எடுப்பதாக இவர் மீது விமர்சனம் உண்டு. ஆனால், நான் சாதிக்கு எதிரான படங்களைத்தான் இயக்குகிறேன். என்னுடைய திரைப்படங்களில் என் மக்கள் சிந்தித்த பிரச்சனைகளை நான் தொடர்ந்து பேசுவேன்’ என விளக்கமளித்தார் மாரி செல்வராஜ்..

பைசன் படத்திற்கு பின் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்த படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தனுஷ் இதுவரை நடித்த திரைப்படத்திலேயே இது அதிகமான பட்ஜெட் என சொல்லப்படுகிறது.. அதிக பட்ஜெட் என்பதால் மாரி செல்வராஜ் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டாராம். அவருக்கு இந்த படத்தில் 15 கோடி சம்பளம் கொடுக்கப்படவிருக்கிறது.

முக்கியமாக வழக்கமாக தனது படங்களில் மாரி செல்வராஜ் பேசும் சாதிய பிரச்சனைகள் இந்த படத்தில் இடம்பெறாது என்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு சரித்திர கதையை படமாக திட்டமிட்டு இருக்கிறாராம் மாரி செல்வராஜ்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.