“ஒரே ஒரு ரூம்…. 1.8 கோடி சம்பளம்” அமேசான் இன்ஜினியரின் மாஸ் வெற்றி…. ஐடி ஊழியர்களே, இந்த சீக்ரெட்டை மிஸ் பண்ணாதீங்க….!!
SeithiSolai Tamil March 25, 2026 10:48 AM

நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் வெளிநாடு செல்ல வேண்டும் அல்லது அங்கு பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து காட்டியுள்ளார் இந்திய மென்பொருள் பொறியாளர் கார்த்திக் மோடி. அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தனது விடாமுயற்சியால் இந்தியாவிலிருந்தே வெளிநாட்டு நிறுவனத்தில் ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலையைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

எந்தவிதமான பரிந்துரையும் இன்றி, தனது அறையில் இருந்தபடியே திட்டமிட்டு செயல்பட்டு இந்த இலக்கை எட்டியதாக அவர் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது வெற்றிக்கான ரகசியமாக கார்த்திக் மோடி 12 வார கால கடுமையான பயிற்சியைக் குறிப்பிடுகிறார். சுமார் 30 சர்வதேச நிறுவனங்களை ஆய்வு செய்து, அவற்றின் தேவைகளுக்கேற்ப தனது ரெஸ்யூம் (Resume) மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Kartik Modi (@karrrtiiikkk)