தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனுத் தாக்கல் வரும் முப்பதாம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை நடைபெறவுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் முன்பாகவே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி, தற்போது வேட்புமனுத் தாக்கலிலும் ஒரு புதிய உலக சாதனை முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. தமிழகத்திலுள்ள இருநூற்று முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே இருநூற்று முப்பத்தி நான்கு தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்த கையோடு, அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி சீமான் அதிரடி காட்டினார். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் அறிக்கையையும் மற்ற கட்சிகள் யோசிப்பதற்கு முன்பே வெளியிட்டுத் தனது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். தற்போது அதன் அடுத்த கட்டமாக, வேட்பாளர்கள் அனைவரும் வரும் முப்பதாம் தேதி திங்கட்கிழமை அன்று தங்களது வேட்புமனுக்களை அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதன்மை வேட்பாளர்கள் மட்டுமன்றி மாற்று வேட்பாளர்களும் அன்றைய தினமே தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கலுக்கு ஒதுக்கியுள்ள முதல் நாளிலேயே, தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இந்த அதிரடி நகர்வு மற்ற அரசியல் கட்சிகளிடையே ஒருவிதமான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், சீமானின் இந்த வியூகம் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!