சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2800 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 14,836 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,688 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று வெள்ளி விளையும் கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.