13 வயது சிறுமி விவகாரத்தில் திமுக பிரமுகர் கைது...! - அமமுக, பாஜக கடும் தாக்கு
Seithipunal Tamil March 25, 2026 05:49 PM

சென்னை மேற்கு மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி பரத் (30) என்பவரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், உறவினரான பரத் நீண்டகாலமாக இச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அரசியல் தளத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் இத்தகைய செயல்பாடுகளால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும், ஆளுங்கட்சியினர் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைவைாட்டுவதாகத் தெரிவித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.