தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் திடீர் திருப்பமாக, மாநிலப் பொதுச்செயலாளர் டி.செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் (Suspend) செய்து செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாகத் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பான விவகாரங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் புகைச்சல், தற்போது இது போன்ற அதிரடி நீக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.
முக்கிய நிர்வாகி ஒருவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது வெறும் ஒழுக்க நடவடிக்கை மட்டுமல்ல, கட்சிக்குள்ளே இருக்கும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முதல் அடி” என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.