பிரபல மலையாள நடிகர் ஒருவரின் விவாகரத்து தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது. பல்வேறு பெண்களோடு திருமணம் கடந்த உறவில் இருப்பது , சக நடிகைகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது என அந்த நடிகர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்படுகின்றன. கூடிய விரைவில் இந்த விவாகரத்து குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் கடந்த ஆண்டு ஹேமா கமிட்டியின் அறிக்கை பல்வேறு அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளியிட்டது. மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு பாலியல் குற்றங்கள் குறித்த விபரங்களை இந்த அறிக்கை வெளியிட்டது. முன்னணி நடிகர்கள் , இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாலியல் குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்கள். அதே நேரம் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வும் கேரளாவில் அதிர்ச்சியளித்த சம்பவங்களில் ஒன்று
மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் போதை பொருட்கள் பயண்பாடு மற்றும் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள். நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த ஆண்டு கொக்கெயின் பயன்பாட்டிற்காக கைது செய்யப்பட்டார். அதே போல் அண்மையில் மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றம்சாட்டினார்
அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரைப் பற்றிய தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . பெண்களிடம் திருமணம் கடந்த உறவில் இருந்து வந்த பிரபல மலையாள நடிகரின் மனைவி சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து, தனது மனுவுடன் குடும்ப நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பல நடிகர்களைப் போலவே, இந்த நடிகரும் தொடர்ச்சியாகப் பெண்களை ஏமாற்றும் பழக்கம் உடையவர். கடந்த ஆண்டு ஒரு படப்பிடிப்புத் தளத்தில், ஒரு பெண் கலைஞருக்கு 'ஹங்கெமோலர்' என்ற பிராண்டின் கவர்ச்சியான உள்ளாடை செட்டைப் பரிசளித்தபோது ஆவர் டிபட்டார். குடிபோதையிலோ அல்லது கஞ்சா போதையிலோ இருக்கும்போது, அந்த நடிகர் தனது சக நடிகர்கள் பலரிடம் தனது படுக்கையறை பெருமைகளைப் பற்றி பேசுவதாக படத்தில் பணியாற்றியவர்கள் தெரிவித்துள்ளார்களாம். இந்த தகவல் மலையாள திரையுலகம் முழுவதும் காட்டுத்தீப்போல் பரவியுள்ளதாக கூறப்படுகிறது .
யார் இந்த நடிகர் என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ஆனால் அந்த நடிகரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.