அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது ஈரானுக்கு 5 நாட்கள் அவகாசம் வழங்கி ஒரு ‘மெகா’ கெடுவை விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்து வரும் சூழலில், ட்ரம்ப் தற்போது இந்த 5 நாள் இடைவெளியை ஒரு ராஜதந்திர நகர்வாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.
இந்த 5 நாட்களுக்குள் ஈரான் தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“உண்மையான ஆட்டம் (Asli Khel) இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறது” என்று ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 5 நாள் கெடுவுக்குப் பிறகு அமெரிக்கா தனது ‘பிளான் பி’-யை அமல்படுத்தத் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒருவேளை ஈரான் பணியவில்லை என்றால் அதன் அணுசக்தி மையங்கள் குறிவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஈரான் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தை செய்திகளை மறுத்து வருவதோடு, அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று கூறி வருகிறது.
ஹோமுஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடி உலக நாடுகளின் எண்ணெய் விநியோகத்தைத் தடுத்துள்ள ஈரானின் ஆட்டத்தை தடுக்க , ட்ரம்ப் இந்த 5 நாள் அவகாசத்தை ஒரு இறுதி எச்சரிக்கையாக வழங்கியுள்ளார். வரும் நாட்களில் மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.