“ஐயா சொன்னா சொன்னதுதான்” மகளிருக்கு ₹3000…. இளைஞர்களுக்கு வேலை…. திமுக, அதிமுகவுக்கு வந்த மெகா தலைவலி….!!
SeithiSolai Tamil March 26, 2026 08:48 PM

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (குடும்பத் தலைவிகளுக்கு) மாதம் ₹3000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தற்போது அரசு வழங்கும் தொகையை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வட்டி இல்லாக் கடன், சிறு, குறு தொழில் முனைவோருக்கு 50% மானியம் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என ராமதாஸ் ஐயா அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பாமகவின் இந்த ‘மெகா’ பிளான், மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை விட மிகவும் வலிமையானதாகப் பார்க்கப்படுகிறது. ஐயாவின் இந்த அறிவிப்பு, குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.