தேர்தல் களம் தீவிரம்...! வேட்புமனு தாக்கல் முதல் பிரசாரம் வரை...! - திமுக கூட்டணி முழுவீச்சில்
Seithipunal Tamil March 26, 2026 10:48 PM

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்குகிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையுடன் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இந்த பின்னணியில், தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., த.வெ.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன.

கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு, பிரச்சார திட்டங்கள், வாக்குறுதிகள் என அரசியல் அரங்கம் பரபரப்பாக மாறியுள்ளது.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன.

பெரும்பாலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி பட்டியல் தயாராகும் நிலையில் உள்ளது.தி.மு.க. எந்த தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும், கூட்டணி கட்சிகளுக்கு எந்த பகுதிகள் வழங்கப்படும் என்ற முழுமையான பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.மேலும், மாநிலம் முழுவதும் விரிவான பிரச்சார பயணத்திற்கும் அவர் தயாராகியுள்ளார்.

ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கி, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார். இதன் மூலம் தேர்தல் களம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.