“வாசனுடன் சேர்ந்து நாங்களும் பலி கடா ஆக முடியாது”- தாமரை சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகிகள் விலகல்
Top Tamil News March 26, 2026 08:48 PM

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் இருவர் விலகியுள்ளனர்.


அதிமுக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜூ சக்கோ, புருஷோத்தமன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பெரிய கட்சியான அதிமுக சின்னத்தில் நிற்காமல் தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 2016ல் ஜெயலலிதா 10 தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கச் சொன்னபோது, முடியாது எனக் கூறி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார். எங்களை போன்ற பல மாவட்டத் தலைவர்கள் ஜி.கே.வாசனின் முடிவால் அதிருப்தியில் இருக்கிறோம். எங்களோடு கலந்து ஆலோசிக்காமல் தாமரையில் போட்டியிடும் முடிவை அவர் எடுத்துள்ளார். நாங்கள் அவரோடு சேர்ந்து பலி கடா ஆக முடியாது என ராஜினாமா செய்த தமாகா மாவட்ட நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.