தியாகத் தலைவி சோனியா காந்தி விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திப்போம் - காங்கிரஸ் எம்பி மாணிக்கம் உருக்கம்!
Seithipunal Tamil March 26, 2026 09:48 PM

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பாசமுள்ள காங்கிரஸ் உறவுகளுக்கு ஒரு மனமார்ந்த வேண்டுகோள்,

வீழ்ந்து கொண்டிருந்த நம் இயக்கத்தை உறுதியாக காக்க தலைமை ஏற்று வழிநடத்திய தியாகத் தலைவி  நம் அன்னை சோனியா காந்தி அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று பூரண நலத்துடன் நீண்ட ஆயுள் வாழ இறைவனை நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

நம் அருகில் உள்ள கோயில், பள்ளி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி, அவர்களின் நலனுக்காக வேண்டிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி" என தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.