2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு இரண்டு பொது தொகுதிகள், ஆறு தனி தொகுதிகள் என மொத்தம் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இன்னும் எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அந்தவகையில் திமுக தொகுதிகள் ஒதுக்கீடு குழு இன்று விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் தொ. திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேசியதில், நாங்கள் கேட்ட சில தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளனர். இன்னும் சில தொகுதிகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாளை காலை மீண்டும் பேச உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை அனைத்து தொகுதிகளையும் பெற்று ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறதாகவும், நாளையோ அல்லது நாளை மறுநாளோ எந்தக் கட்சிக்கு என்னென்ன தொகுதிகள் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தொகுதி ஒப்பந்தம் விவகாரத்தில், நாங்கள் கேட்கும் தொகுதிகளை கூட்டணியினர் கேட்டிருக்கும். அதேபோல், அவர்கள் கேட்ட தொகுதிகளை நாங்கள் கேட்டிருப்போம். அதனால், அனைத்துக் கட்சியினருடனும் பேசி முடிவு எட்டப்படும் என்று செய்தியாளர்களிடம் திருமா தெரிவித்துள்ளார்.