முன்பதிவு செய்த சிலிண்டர் கிடைக்காததால் ஆத்திரம்; அனுமதியின்றி சிலிண்டரை தூக்கிச் ஓடிய வாடிக்கையாளர்கள்; செய்வதறியாது நின்ற முகவர்கள்..!
Seithipunal Tamil March 27, 2026 05:48 AM

மேற்கு ஆசிய போர் காரணமாக சர்வதேச நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களில் அன்றாட தேவைகளுக்காக சிலிண்டர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வாறு புக் செய்த சிலிண்டர்கள் இன்று வந்துவிடும் அல்லது நாளை வந்துவிடும் என்று வாடிக்கையாளர்கள் காத்திருந்து காத்திருந்து வராத காரணத்தினால் பொறுமை இழந்து அத்துமீறலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சிலிண்டர் புக் செய்யும் நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீசுக்கு கால் செய்தால் எடுப்பதில்லை. முகவருக்கு கால் செய்தால் பதில் இல்லை. இதனால் கடுப்பான பொதுமக்களில் சிலர் சிலிண்டரை தூக்கிக் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவு, உலகின் பல நாடுகளில் உள்ள சமையல் அறை வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்கள் பற்றாக்குறையால் தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் தொற்றிய பதற்றம் ஓட்டல்கள், வீடுகளில் உள்ள அடுப்பை பற்ற வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று திறந்திருக்கும் ஓட்டல்களிலும் உணவுப் பொருட்களின் விலை சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள பில் நகரில் வசிக்கும் மக்கள் சிலிண்டர் புக் செய்துள்ளனர். 

இவர்கள் முன்பதிவு செய்து வாரங்கள் கடந்தபோதும், வீட்டிற்கு சிலிண்டர் வரவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்துள்ளனர். அவர்களும் ஓரிரு நாட்களில் வந்துவிடும் எனக் கூறியுள்ளனர். சிலர் நேரடியாக சென்று விசாரித்தபோதும்,எதையாவது  கூறி தட்டிக் கழித்துள்ளனர்.

இந்நிலையில் முன்பதிவு செய்தும் சிலிண்டர் கிடைக்காத விரக்தியில், வாடிக்கையாளர்கள் சிலர் கேஸ் ஏஜென்சி நிறுவனத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே, அங்கு புக் செய்துவிட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருந்துள்ளனர். அப்போது, லையனுக்கு கொண்டு செல்வதற்காக சரக்கு வாகனத்தில் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு தயாராக இருந்துள்ளது. 

இதனை பார்த்த சில வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி தங்களுக்கு தேவையான சிலிண்டரை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் திர்ச்சியடைந்த முகவர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். கேஸ் ஏஜென்சி முன்பு வாடிக்கையாளர்கள் சிலர் அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.