போரில் அமெரிக்காவுக்கு நஷ்டம்.. கஜானாவை நிரப்பும் ரஷ்யாவின் லாபம்ஒரு நாளைக்கு ரூ. 71 பில்லியனா? கலங்க வைக்கும் பின்னணி.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!
SeithiSolai Tamil March 27, 2026 11:48 AM

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், இந்தப் போரினால் ரஷ்யா மட்டும் பெரும் பொருளாதார லாபத்தை ஈட்டி வருகிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் வளைகுடா நாடுகளின் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேறு வழியின்றி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா விதித்திருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா தற்போது ஒரு நாளைக்குச் சுமார் 71 பில்லியன் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறது.

மறுபுறம், இந்தப் போரில் ரஷ்யா ஈரானுக்கு ரகசியமாக உதவி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உணவு மற்றும் மருந்துகளைத் தவிர, ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதங்களையும் ரஷ்யா ஈரானுக்கு வழங்குவதாக மேற்கத்திய உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் குறித்த துல்லியமான தகவல்களைச் செயற்கைக்கோள் மூலம் ஈரான் பெற்றுத் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே ஈரானுக்கு உதவி வருவதாகத் தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.