சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண சங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 14,651 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 245 ரூபாய் க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.