ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.. இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்..!
Webdunia Tamil March 27, 2026 03:48 PM

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் கவச எதிர்ப்பு படை பிரிவின் மூத்த தளபதி ஹசன் முகமது பஷீர் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தெற்கு லெபனானில் உள்ள லிட்டானி ஆற்றின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த இவர், இஸ்ரேலிய படைகள் மற்றும் பொதுமக்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்களை ஒருங்கிணைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலி ரேசா டாங்சிரி மற்றும் உளவுப்பிரிவுத் தலைவர் ஹனம் ரெசாயி ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதை ஐடிஎஃப் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது மற்றும் சர்வதேச கடல்சார் வணிகத்திற்கு இடையூறு விளைவிப்பது போன்ற நடவடிக்கைகளில் டாங்சிரி முக்கியப் பங்கு வகித்தவர் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 330 பயங்கரவாதிகள் மற்றும் 350-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.