விஜயகாந்த் சாவுக்கு போயிருந்தா நான் செத்திருப்பேன்!… பொன்னம்பலம் ஃபீலிங்…
CineReporters Tamil March 27, 2026 02:48 PM

80, 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய வில்லன் நடிகராகவும், சண்டை காட்சி நடிகராகவும் இருந்தவர் பொன்னம்பலம். நல்ல உயரம், ஆஜானு பாகுவான உடம்பு என மிரட்டலான லுக்கில் இருப்பார். விஜயகாந்தின் பல திரைப்படங்களில் அவருடன் சண்டை போடும் காட்சிகளில் பொன்னம்பலம் நடித்திருக்கிறார். அதேபோல் பொன்னம்பலத்திற்கு பல வகைகளில் விஜயகாந்து உதவியிருக்கிறார். பல பேட்டிகளில் விஜயகாந்த் தனக்கு செய்த பல உதவிகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் பொன்னம்பலம்..

கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட ‘கேப்டன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் நான் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டேன்.. என்னை அவர் காப்பாற்றி இருப்பார்’ என்றெல்லாம் பேசியிருந்தார். மேலும் தான் எப்போது விஜயகாந்த் வீட்டுக்கு போனாலும் 5 கிலோ நல்லி எலும்பு போட்டு குழம்பு வைத்து எனக்கு சாப்பிட கொடுப்பார்.. எனக்கு எப்போது கஷ்டம் வந்தாலும் பணம் கொடுத்து உதவுவார்’ என விஜயகாந்தை பற்றி பல விஷயங்களை பொன்னம்பலம் பேசியிருக்கிறார்..

அதேநேரம் விஜயகாந்த் இறந்தபோது பொன்னம்பலம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய பொன்னம்பலம் ‘என் அக்கா இறந்தபோது திடீரென சொன்னால் எனக்கு நெஞ்சு வலி வந்துடும் என்பதால் உடம்பு சரியில்லை என்று நாசுக்காக சொல்லி காரில் கூட்டிட்டு போனார்கள்.. அப்போது கூட நெஞ்சுவலி மாத்திரை, பிபி மாத்திரை எல்லாம் போட்டுட்டுதான் போனேன்..

கேப்டன் சாவுக்கு கூட நான் போகாத காரணம்.. யார் யாரோ ஏதோ சொல்லுவாங்க.. ஆனா கண்டிப்பா நான் கேப்டன் சாவுக்கு போயிருந்தா நான் செத்துருப்பேன்.. அவர் கூட சேர்த்து என்னையும் தூக்கிட்டு போயிருப்பாங்க.. ஏன்னா என்னால அவர அந்த கோலத்தில் பார்க்க முடியாது.. கேப்டன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன்’ என ஃபீலிங்கோடு பேசினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.