3,500 வீரர்கள், ராட்சத போர்க்கப்பல்.. ஈரானின் கார்க் தீவை கைப்பற்றப் போகிறதா அமெரிக்கா? தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் ராணுவம்.. அதிரவைக்கும் ரகசியத் திட்டம்..!!
SeithiSolai Tamil March 30, 2026 10:48 AM

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது 3,500 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ என்ற போர்க்கப்பல் மூலம் வந்துள்ள இந்த வீரர்கள், அங்கு ஏற்கனவே உள்ள 50,000 அமெரிக்கப் படைகளுடன் இணைந்துள்ளனர்.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்பட்டாலும், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானுக்கு எதிரான ஒரு பெரிய ராணுவத் திட்டத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற செய்தி நிறுவனங்களின்படி, ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தரைவழித் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தாலும், போர் விமானங்கள் மற்றும் கூடுதல் வீரர்களின் வருகை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வரும் நாட்களில் போர் இன்னும் தீவிரமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.