பாகிஸ்தான் ஊரடங்கு: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க லாக்டவுன் ஒன்றே வழியா? ஈரான் போரால் வந்த விபரீதம்.. ஷாபாஸ் அரசின் அதிரடி திட்டம்.. கசிந்த ரகசிய அறிக்கை..!!
SeithiSolai Tamil March 30, 2026 12:48 PM

ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ஒரு சிலிண்டர் விலை 5,135 பாகிஸ்தானி ரூபாய் வரை எகிறியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, பாகிஸ்தானின் ஷாபாஸ் அரசு நாடு முழுவதும் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஒரு வரைவு அறிக்கை கசிந்துள்ளது.

இந்த லாக்டவுன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முயல்வதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்திருந்தாலும், கசிந்த வரைவு அறிக்கை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த ஈரான் போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு பெரும் இடியாக இறங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.