படுக்கையறையில் காட்டும் 'பச்சை ஆர்வம்'.. 'கிரீன் செக்ஸ்' தான் இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட் - ஆரோக்கியத்திற்கு எப்படி எல்லாம் உதவுகிறது?!
Dinamaalai March 30, 2026 04:48 PM

பிளாஸ்டிக் தவிர்ப்பு, மறுசுழற்சி, இயற்கை உணவுகள் என மாறிவிட்ட இன்றைய இளைய தலைமுறையினர், தற்போது தங்களது அந்தரங்க வாழ்க்கையிலும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' கொள்கைகளைப் புகுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கு 'கிரீன் செக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாம் பயன்படுத்தும் ஆணுறைகள், லூப்ரிகண்டுகள் மற்றும் அந்தரங்க விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகப்படியான பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மனித உடலின் மென்மையான பகுதிகளிலும் எரிச்சலை உண்டாக்குகின்றன.

'கிரீன் செக்ஸ்' என்றால் என்ன?

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத, எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை உடலுறவின் போது பயன்படுத்துவதே 'கிரீன் செக்ஸ்'.

சாதாரண ஆணுறைகளில் 'கேசின்' என்ற பால் புரதம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வீகன் ஆணுறைகள் ரசாயனங்கள் மற்றும் பாரபென் அற்றவை. இவை எளிதில் மக்கும் தன்மை கொண்டவை.

பெட்ரோலியம் கலந்த லூப்ரிகண்டுகளுக்குப் பதில், நீர் சார்ந்த அல்லது இயற்கை எண்ணெய்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது. பிளாஸ்டிக் பேக்கேஜிங் குறைவான மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பது.

உடல் நலத்திற்கு என்ன பலன்?

சுற்றுச்சூழல் நட்பு பொருட்களைப் பயன்படுத்துவதால் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரசாயனங்கள் இல்லாததால் மென்மையான தோலில் அலர்ஜி ஏற்படுவது குறைகிறது. எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கிறது. 

வாசனை திரவியங்கள் இல்லாத இயற்கை பொருட்கள் அந்தரங்கப் பகுதியின் அமிலத் தன்மையைச் சீராக வைக்க உதவுகின்றன. இதனால் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. செயற்கை எண்ணெய்கள் இல்லாத பொருட்கள் தோலில் சிவப்புத் தடிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்றன.

சமீபத்திய ஆய்வின்படி, சுமார் 39 சதவீத இளைஞர்கள் தங்களது வாழ்க்கைத்துணை அல்லது காதலர் சுற்றுச்சூழலில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதாவது, படுக்கையறையில் நீங்கள் காட்டும் இந்த 'பச்சை' ஆர்வம், உங்களை ஒரு பொறுப்புள்ள நபராகக் காட்டுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.