சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்த நேரத்தில், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதை விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தங்கத்தின் விலை கடந்த வார தொடக்கத்தில், அதாவது 23-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து கிராம் 13,340 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கும் விற்பனையானது. 24-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
பின்னர், 25-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கு எகிறியது. தொடர்நது, 26-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமையான 27-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான 29-ம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று, காலையில் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளியின் விலையும் கூடுவதும் குறைவதுமாக உள்ளது. கடந்த வார தொடக்கத்தில், அதாவது 23 மற்றும் 24-ம் தேதிகளில், ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 25-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில், வெள்ளியின் விலை இன்று காலையிலும் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது.
ஆனால், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.