BREAKING: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு…. தண்டனை ஏப்ரல் 2-க்கு ஒத்திவைப்பு….!!
SeithiSolai Tamil March 30, 2026 07:48 PM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் பிடியில் உயிரிழந்த வழக்கு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (மார்ச் 30) அறிவிக்கப்படும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், தண்டனை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்களை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார். “ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது போன்ற கொடுமை இது” என்று நீதிபதியே குறிப்பிட்ட இந்த வழக்கில், ஒன்பது போலீசாருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்குமா என்பது ஏப்ரல் 2-ல் தெரிந்துவிடும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.