விஜய் சேதுபதிக்கு 25 லட்சம் கடன்... ஆதவ் அர்ஜூனாவின் முழு சொத்து விவரம்
Top Tamil News March 31, 2026 01:48 AM

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு தாக்கல்

" id="undefined" src="https://media.assettype.com/hindutamil-prod%2F2026-03-30%2Fo0pwwhrb%2FWhatsApp-Image-2026-03-30-at-2.02.36-PM.jpeg">

வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா அசையா சொத்து மதிப்பு ரூ.17.49 கோடி இருப்பதாக பதிவு செய்துள்ளார்.. அசையும் சொத்து ரூ.180 கோடி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கையிருப்பு ரொக்கம் ரூ.1.69 கோடி என்றும், வங்கி இருப்பு ரூ.17.53 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் 2024-25 வருமானம் ரூ.11.10 கோடியாகும். ரூ.20.50 லட்சம் மதிப்பிலான இன்னோவா கிரிஸ்டா, மாருதி ஆல்பா கார்கள், ரூ.1.12லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். 2.29 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,691 கிராம் தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தன்னுடைய தங்கை சீதாலட்சுமிக்கு 46 கோடி கடனாக கொடுத்து இருக்கிறார். விஜய் சேதுபதிக்கு 25 லட்சம் கடன் கொடுத்து இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா voice of common நிறுவனத்திற்கு மட்டுமே 66 கோடி கடன் கொடுத்து இருக்கார். ஆதவ் அர்ஜுனாவின் பிரமாண பத்திரத்தில் தெளிவாக கரூர் 41 பேர் மரண வழக்கில் தன் மீது BNS 105,110,125(B), 223 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.1.88 கோடி அரசுக்குசெலுத்த வேண்டிய நிலுவை தொகை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி பெயரில் அசையும் சொத்து ரூ.162 கோடி இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு ரூ.26.26 கோடி வங்கிக்கடன் உள்ளது. அவரது பெயரில் ரூ.83.22 கோடி அசையா சொத்துக்கள் உள்ளன.


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.