“ரெண்டு பேருக்குள்ள சண்டை நடந்தா மூணாவது மனுஷனுக்குத் தான் லாபம்”னு சொல்வாங்க, ஆனா இங்க மூணாவது மனுஷனுக்குத் தான் ‘தர்ம அடி’ கிடைச்சிருக்கு. ரயிலில் பயணம் செய்த இரண்டு இளம் பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென பெரும் கைகலப்பாக மாறியது.
ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, எட்டி உதைப்பது என அந்த ரயில் பெட்டியே ஒரு நிமிடம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த ‘சண்டை காட்சியை’ பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அப்போது, மேல் படுக்கையில் (Upper Berth) படுத்திருந்த ஒரு இளைஞன், “ஏன் இப்படி சண்டை போட்டுக்கிறீங்க?” என்று சமாதானம் செய்ய முயன்றான். ஆனால், அந்தப் பெண்கள் அவனையும் விட்டுவைக்கவில்லை. ஆவேசத்தில் இருந்த ஒரு பெண், அந்த இளைஞனை மேலிருந்து கீழே இழுத்துப் போட்டு கண்டபடி மிதிக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்த பயணிகள் ஒருபுறம் அதிர்ச்சியடைந்தாலும், அந்த இளைஞனின் நிலைமையைப் பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர். சமூக வலைதளங்களில் “லைவ் ஆக்ஷன் மூவி” எனப் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ, இப்போது செம வைரலாகி வருகிறது. இனிமேல் சண்டையை நிறுத்தப் போகும் முன் அந்த இளைஞனை நினைத்துக் கொள்வது நல்லது!