“அவங்க எண்ணெயை நாம ஏன் எடுக்கக்கூடாது?” ஈரானை அழிக்க டிரம்ப் 1987-லேயே போட்ட மாஸ்டர் பிளான்.. இப்போ நடக்குற போர் பத்தி அப்பவே துல்லியமா கணிச்சது எப்படி? நடுங்கும் ஈரான்..!!
SeithiSolai Tamil March 31, 2026 12:48 PM

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் அளித்த நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1987-ஆம் ஆண்டு, தனது 41 வயதில் பத்திரிகையாளர் பார்பரா வால்டர்ஸிடம் பேசிய டிரம்ப், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் வெடிக்கும் என்றும், ஈரான் அமெரிக்காவைத் தாக்கினால் அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஆலைகளைக் கைப்பற்ற வேண்டும் என்றும் கணித்திருந்தார்.

சோவியத் யூனியனை விட ஈரானின் அப்போதைய தலைமையே மிகவும் ஆபத்தானது என்று அவர் அன்றே குறிப்பிட்டிருந்தார். தற்போதைய சூழலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருவது, டிரம்பின் பழைய கணிப்புகளை மெய்ப்பிப்பது போல் உள்ளது.

அதே காலகட்டத்தில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து பல முன்னணி பத்திரிகைகளில் டிரம்ப் விளம்பரங்களை வெளியிட்டார்.

மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா வீணாகப் பணம் செலவழிக்கக் கூடாது என்றும், அமெரிக்காவின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது அதற்கான விலையை மற்ற நாடுகளே ஏற்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

“>

 

குறிப்பாக, ஈரானின் முக்கியத் தளமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து 1988-லேயே அவர் பேசியிருந்தார். பல தசாப்தங்களுக்கு முன்பு டிரம்ப் கொண்டிருந்த அதே ஆக்ரோஷமான எண்ணங்களே, இன்றும் அவரது தற்போதைய கொள்கைகளில் எதிரொலிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.