மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!
Top Tamil News March 31, 2026 10:48 AM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பழனி - என்.பாண்டி
  • பத்மநாமபுரம் - ஆர்.செல்லசுவாமி
  • கந்தர்வக்கோட்டை - சின்னதுரை
  • திருவொற்றியூர் - சுந்தரராஜன்
  • கீழ்வேளூர் -டி.லதா
  • © Copyright @2026 LIDEA. All Rights Reserved.