புதிய நிதியாண்டு பிறக்கப்போகும் ஏப்ரல் 1 முதல், சாமானிய மக்களின் பட்ஜெட்டை பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருமான வரித்துறையில் 1961-ம் ஆண்டின் பழைய சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் அறிமுகமாகிறது. இதில் 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய நிம்மதியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பான் கார்டு வாங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன; இனி பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் கார்டை மட்டும் பயன்படுத்த முடியாது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஏடிஎம் மற்றும் ரயில்வே விதிகள் உங்கள் பாக்கெட்டுக்குச் சவாலாக அமையலாம். பிஎன்பி (PNB) வங்கி தனது டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளதுடன், ஹெச்டிஎஃப்சி (HDFC) போன்ற வங்கிகள் பிஐ (UPI) மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்கும் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளன.
ரயில்வேயைப் பொறுத்தவரை, பயணம் செய்வதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால்தான் பணம் திரும்பக் கிடைக்கும்; 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் ஒரு பைசா கூட ரீஃபண்ட் வராது. மேலும், கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதால், ஏப்ரல் 1 முதல் உங்கள் செலவுத் திட்டத்தை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது.