கோவா மாநிலத்தில் உள்ள பாகா கடலில் பாரா செய்லீங் செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கடலில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோவா உலகளவில் பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாகும். மிகச்சிறிய மாநிலமான கோவாவில் 101 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை உள்ளது. இவை மேற்கு கடற்கரை, பாகா, கண்டோலிம், பாலோலெம் என பல பகுதிகளாக அழைக்கப்படுகிறது. வாழ்நாளில் ஒருமுறையாவது கோவா எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். இப்படியான நிலையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்திருக்கும் கோவாவிற்கு உள்ளூர் முதல் உலகம் வரையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு டால்பின்கள், நீர் விளையாட்டுகள், சூரிய உதயம் /மறைவு நாம் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்.
அதேபோல் கோவாவில் பாராசெய்லிங் மிகவும் புகழ் பெற்றது. படகில் செல்லும்போது கடலின் நடுவே இருந்து அதன் அழகை ரசிக்கும் வகையில் படகில் இருந்து வின்ச் கம்பி மூலம் பாதுகாப்பாக மேலே தூக்கப்பட்டு செயல்படுத்தபடும் ஒரு சாகச விளையாட்டாகும். இது வடக்கு கோவாவில் காணக் கிடைக்கிறது. பாராசூட், நீச்சல் உபகரணம் என சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படிருக்கும். இந்த நிலையில் கோவா கடலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில்,சுற்றுலாப் பயணி ஒருவர் காற்றில் பறந்துகொண்டிருந்தபோது பாராசெய்லிங் கயிறு திடீரென அறுந்ததது, உடனடியாக அவர் கடலில் விழுந்தார். நல்லவேளையாக அந்த சுற்றுலாப் பயணி பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். உடனடியாக அவர் சென்ற படகில் இருந்த குழுவினர் அந்த நபரை மீட்டனர்.
#Watch: In Goa’s Baga Beach, a parasailing cable snapped mid air, causing a tourist to fall into the water. The person was quickly rescued by the crew and reported safe. #Goa #BagaBeach #Parasailing #Accident #PublicSafety #Travel #IndiaNews #JaagIndia pic.twitter.com/mCEyXBLMAv
— Jaag India (@thejaagindia) March 30, 2026
இந்தச் சம்பவம் அடங்கிய வீடியோ வைரலான நிலையில் கோவா காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் மீண்டும் சாகச விளையாட்டுகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்தபோது27 வயதான பெண்ணும் அவரது பயிற்றுவிப்பாளரும் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.